Thursday, January 7, 2010

எலும்புத்துண்டை கடைவாய் வலிக்க தின்னப் பழக்கப்பட்ட நாய்.

நான் நாயாக வளர்க்கப்பட்டதாகவே உணர்ந்திருந்தேன். நன்கு பழக்கப்படுத்தப்பட்ட நாய். எவ்வாறு மனிதத்தசைகளின் சுருக்கங்களுக்கேற்ப வினைசெய்ய வேண்டுமென வலிக்க வலிக்க பழக்கப்படுத்தப் பட்ட நாய். சொற்களற்ற நாய்.

நாகரீகத்தாலும், பழக்கவழக்கத்தாலும் கலாச்சாரத்தின் பெயராலும், பால்வகைப்பிரிவுகளாலும், பாரம்பரியத்தின் பெயராலும் நடக்கும் கற்பிதங்களை சந்தேகிக்கவோ, கேள்விகேட்கவோ, அதற்காக நான் வாயைத்திறக்க எண்ணும்போதெல்லாம் என்வாயில் திணிக்கப்பட்ட நடத்தைப்பேறென்னும் எலும்புத்துண்டை கடைவாய் வலிக்க தின்னப் பழக்கப்பட்ட நாய்.

என்னைக் குளிப்பாட்டி ஓர்நாள் நடுவீட்டில் வைத்தார்கள். ஆவலாய் மலம் ஊண்பேன் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் கண்களில் மிள்ர்வதையும் அவர்கள் எதிர்பார்ப்புக்கு பதிலாய் நானென் குலைந்த வாலை சற்றும் அசைக்காது நீங்கள் உண்ட மலம் எனக்கானதில்லையென்பதை எனக்கு போதித்திருந்த நடத்தைகளைக் காறி உமிழ்ந்துவிட்டு பற்கள் நெறிபடச் சொன்னேன். பழக்கப்பட்ட வெற்று நாயாகிய என் மனதில் ஏன் இப்படி எனை நாயாக உணர்கிறீர்கள் என்ற கேள்வி எனக்குள் எழுமென்றோ, அவர்களிடம் கற்றுக்கொண்ட என் விதிகளின்படி அவர்களையே வேவு பார்ப்பேனென்றோ அவர்கள் அறிய வாய்ப்பில்லை.

என் அனுமதியை என் குழைந்த உடலால் அறிந்து பழக்கப்படுத்தியவர்களுக்கு என் உடல் சுபாவம் ஒன்றே என்னை அறிதலின் விதி. சுபாவன் என் குணமல்ல வளர்க்கும் விதியறிந்தவர்களே. நீங்கள் வினைச்செயல்களைப் பழக்கம் என்று நம்பி அதன் பின் உங்கள் கால்களை ஓடவைப்பது காண்டு நான் அறுவெறுக்கிறேன். நான் வெற்று நாய் உங்கள் வாயசைவுகளுக்கு ஒட்டுமொத்த உடலையும், என்னையும் ஒப்படைத்த வெறும் நாய். நன்றியுள்ள மிருகம் வெற்றுநாய்.


5 comments:

  1. One of the most liberated women speaks up for the not-so-liberated! The power in your writing is amazing. Keep it up.

    ReplyDelete
  2. // அதற்காக நான் வாயைத்திறக்க எண்ணும்போதெல்லாம் என்வாயில் திணிக்கப்பட்ட நடத்தைப்பேறென்னும் எலும்புத்துண்டை கடைவாய் வலிக்க தின்னப் பழக்கப்பட்ட நாய். //
    அற்புதமான வரிகள். சிறுமை கண்ட போது எல்லாம் அடங்கிப் போகும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் இது பொருந்தும்.

    நிறைய முரன்பட்ட சிந்தனைகள் காணப்படுகின்றன. ஊரேடு ஒத்துவாழ் என்பது முதுமொழி. எதிர்ப்பது என்பது எல்லாத்தையும் எதிர்ப்பது ஆகாது. அநியாங்களை எதிர்ப்பது மட்டும் எதிர்ப்பு. நன்றி கொற்றவை.

    ReplyDelete
  3. கொற்றவைJanuary 11, 2010 at 3:46 AM

    நான் சர்வாதிகாரி அல்ல பாலா அவர்களே...எழுத்துப்பிழை திருத்ததுக்குரியதே

    ReplyDelete
  4. கொற்றவைJanuary 11, 2010 at 3:49 AM

    திரு பித்தன் அவர்களே..நான் கணவன் மனைவி உறவை விவரிப்பதாக கூறுவது உங்கள் கண்ணோட்டம்

    ReplyDelete
  5. கொற்றவைJanuary 11, 2010 at 3:55 AM

    யாரின் விளக்கமான நியாம்? யாருக்கெதிரான அநியாயம்...நீங்கள் என் எழுத்துக்களுக்கு விமர்சனம் செய்வதோடு ஊருக்கு நீதியும் சொல்கிறீர்கள் தோழரே...

    ReplyDelete